விமானத்தில் ஒன்றாக பயணிக்கும் எடப்பாடியார் – மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2020 (08:41 IST)
இராமநாதபுரத்தில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணிக்க இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ல் தேவர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை சென்று அங்கிருந்து ராமநாதபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அதே விமானத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பயணிக்க இருக்கிறார். மு.க.ஸ்டாலினும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கெடுக்க உள்ள நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :