புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (16:37 IST)

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது. இதனால் சாதாரண பொது மக்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 650 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய சென்னை விலை ஒரு கிராம் தங்கம் ரூ.4611க்கு விற்பனை ஆகிறது என்பதும், ஒரு சவரன் விலை ரூ.36888க்கு விற்பனையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலையில் ஒரே நாளில் அதிரடி உயர்ந்துள்ளது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
மேலும் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.2900 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது