1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price increases in Chennai

உயரும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் தெரியுமா?

சென்னை
தீபாவளிக்கு பிறகு குறைய துவங்கி வந்த தங்கத்தின் விலை இன்று இரண்டாவது நாளாக ஏற்றத்தை கண்டுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. 
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. 
 
ஆம், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்ந்து 4,574-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு! – அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி!