சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

gold
சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
siva| Last Updated: வியாழன், 24 ஜூன் 2021 (11:27 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ஒன்றுக்கு ரூ.35,520 என விறபனையாகி வருகிறது.

மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு 10 காசு குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 எ விற்பனையாகிறது என்பதும் கிலோ வெள்ளி விலை ரூ.73,100 என
விற்பனையாகிறது வருகிரது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :