தங்க நகை வாங்குபவருக்கு ஒரு குட் நியூஸ்!.. அதிரடி விலை குறைவு...
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறுவது, இறங்குவதுமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான், இன்று அதிரடியாக தங்கத்தின் விலை குறைந்திருப்பது பொதுமக்களிடமும், நகை பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது.. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்து கணிசமாக குறைந்து வருகிறது.. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவுரனுக்கு 1120 குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 140 குறைந்து 13 ஆயிரத்து 560ஆக இருக்கிறது..
அதுபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் பத்தாயிரம் குறைந்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு விற்பனையாகிறது.