வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , வியாழன், 16 மே 2024 (22:51 IST)

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் முன்பு கிராம மக்கள் சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு கிடா முட்டு போட்டி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,
 
இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குரும்பை, சின்னகருப்பு, வெள்ளைமறை, கண் செவலை, சீனு குரும்பை, பால்டப்பா பருமறை என பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் கொண்டு வரப்பட்டு மோத விடப்பட்டது.
 
10 முதல் 70 முட்டு வரை எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டு
அதிகப்படியான எண்ணிக்கையில் மோதிக் கொள்ளும் கிடாக்களை வெற்றி பெற்றதாக அறிவித்தது பித்தளை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
 
மேலும் போட்டியில் பங்கு பெரும்  கிடாக்களுக்கு சில்வர் அண்டா மற்றும் மரக்கன்றுகள் கிராம கமிட்டியினரால் பரிசாக வழங்கப்பட்டது.
 
இந்த போட்டியை உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு கழித்தனர்.