வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 மே 2024 (19:19 IST)

வெய்யக்காலமா இது? கொட்டும் மழையால் மதுரை மக்கள் குழப்பம்! – வைகை கரையோரங்களில் வெள்ள எச்சரிக்கை!

Chennai Rain
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த ஏப்ரல் முதலாகவே வெயில் வாட்டி வரும் நிலையில் இந்த மாதம் அக்கினி நட்சத்திரமும் தொடங்கியதால் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தது. கடந்த வாரம் வரை வெயில் பாடாய் படுத்தி வந்த நிலையில் இந்த வாரம் தொடங்கியது முதலே பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து பூமியையும், மக்களையும் குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மதுரையில் ஒருபடி மேலே போய் கனமழையாக கொட்டி வருவதால் மதுரையில் மழைக்காலம் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவி வந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் தொடங்கி இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால் வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கொட்டித் தீர்த்த மழை மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K