வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated :மதுரை , வெள்ளி, 10 மே 2024 (14:49 IST)

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 56 லட்சம் மதிப்புள்ள தங்கம்! மதுரை விமான நிலையத்தில் சுங்க இலக்காவினர் மீட்டனர்!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, அந்த தகவலை எடுத்து மதுரை விமான நிலைய சுங்கா இலாக்காவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது அலி என்பவரின் மகன் முகம்மது தஸ்தகீர் (வயது 21).
 
சந்தேகத்திற்குரிய வகையில், சென்றதை அடுத்து, அவரை மதுரை விமான நிலைய சுங்க இலாகவினர் ஸ்கேன் கருவி சோதனை செய்தனர்.
 
அப்போது, முகமது தஸ்தகீர் தனது ஆசனவாயில் ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டபிடிக்கப்பட்டது அதனை தொடர்ந்து, சுங்க இலக்கவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆசனவாயில் இருந்த பொருளை எடுத்து சோதனை செய்தபோது,பேஸ்ட் வடிவில் இருந்த 790 கிராம் மதிப்புள்ள 24 கேரட் தங்கம் என, தெரிய வந்ததையடுத்து கைப்பற்றப்பட்டது.
 
அதன் மதிப்பு 55 லட்சத்து97 ஆயிரத்து 150 ரூபாய் என, தெரியவந்தது அதனைத் தொடர்ந்து, சுங்க இலாகாவினர் முகமது தஸ்தகீரிடம் கடத்தல் தங்கம் யார் மூலமாக வந்தது என, விசாரணை செய்து வரு
கின்றனர்.