திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (18:34 IST)

இலவசங்களுக்குப் பதிலாக இதைக் கொடுங்கள்…பிரேமலா விஜயகாந்த்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாகப் விலகிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் வேட்புமனுவை இன்று தாக்குதல் செய்தார். அப்போது பேசிய அவர், இலவசங்களுக்கு பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக கொடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.