ரஷ்ய அதிபர் ஒரு கொலையாளி; அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் புதினை கொலையாளி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு உலகமெங்குமிருந்து பெரும்வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்தது.
நவம்பர் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சிச்சார்பில் போட்டியிட்ட ஜோபிடனின் செல்வாக்கை குறைக்கவும். அதேசமயம் அப்போதைய அதிபர் டிரம்பின் செல்வாக்கை அதிகரிக்க ரஷ்ய அதிபர் புதின் முயன்றதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இந்தத் திட்டம் என்பது ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதலின்பேரில்தான் நடந்திருக்கும் என சமீபத்தில் தனது பேட்டியில் கூறினார் பிடன், மேலும் இதற்கான உரிய விலையை புதின் கொடுக்க வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளார்.