திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (17:30 IST)

பிக்பாஸில் கலந்து கொண்டது இந்தச் செலவுக்குத்தான்... கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக வரும் சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் கோவை தெற்குத் தொகுதியில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

எனவே சமீபத்தில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்தார்.

கமல்ஹாசன் ஒவ்வொரு பகுதிக்கும் விரைந்து செல்வதற்காக தனி விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் சென்று வருகிறார்.

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனு தாக்கலின் போது தனது சொத்து மதிப்பு, ரூ.176.93 கோடி ரூபாய் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன், குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் கூறியதாவது:
66 வயதாகிவிட்ட எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்;

எம்ஜிஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றி பெற்றவர்தான் எனத் தெரிவித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். இன்று கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து  கமல்ஹாசன் வாக்குகள் சேகரித்தார். வேட்பாளார்

கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்று வாக்குகள் சேகரிப்பதற்கு பலரும் விமர்சித்துவரும் நிலையில்,. இதற்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

அதில், ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்கான செலவுகளை சமாளிக்கவே பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பாதித்தே எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பை பின்பற்றியே மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மமதா இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 தருவதாகக் கூறியுள்ளார்.