தொடர்புடைய செய்திகள்
- பைசா செலவில்லாம பப்ளிசிட்டி; மய்யம் லோகோவை கோர்ட்டில் ஒட்டி வந்த பிக்பாஸ்!
- அரசியலுக்கு வாங்க ரஜினி … களத்தில் இறங்கிய கோவை ரசிகர்கள்!
- தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி சோதனை
- மகளை பென்சிலால் குத்தி கடித்த தாய்- ஆன்லைன் கிளாஸைக் கவனிக்காததால் கொடுமை!
- 1000 ரூபாய் தகராறில் பலியான உயிர் – கோவையில் திருநங்கைகள் உள்பட குற்றவாளிகள் கைது!
ஆசையாக அப்பா வாங்கி தந்த செல்போன்… உடைந்ததால் மாணவி தற்கொலை!
கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தந்தை வாங்கித் தந்த செல்போன் உடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குப்பனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி வேலை பார்க்கும் இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து புதிதாக ஒரு செல்போன் வாங்கி தந்துள்ளார்.
ஆனால் மாணவி தாரணி அந்த செல்போனைக் கைதவறி கீழே போட்டு உடைத்துள்ளார். இது அப்பாவுக்கு தெரிந்தால் மிகவும் கோபப்படுவார் என நினைத்து தாரணி நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் உடல் கிணற்றில் மிதந்ததை அடுத்து இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இது சம்மந்தமாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
