தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி சோதனை

raid
தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி சோதனை
siva| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (16:44 IST)
தமிழகத்தில் அவ்வப்போது அரசியல் சார்ந்தும் அரசியல் சாராமலும் வருமானவரி சோதனைகள் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. இந்த வருமான வரி சோதனையில் பெரும்பாலும் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் தான் சிக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திடீரென தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோட்டை மையமாகக்கொண்டு கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது

அதேபோல் கோவை அன்னூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் என்பவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சென்னை கோவை ஈரோடு உள்பட தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனை குறித்த முழுவிபரங்கள் இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :