1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (12:26 IST)

பேஸ்புக்கில் நட்பு ; ஆசை காட்டி மோசம் செய்த பெண் : ரூ.83 ஆயிரம் போச்சு

முகநூலில் பழகிய பெண் ஒரு வாலிபரிடம் ஆசை காட்டி மோசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தனசேகரன். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு முகநூலில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்பெண் நாகர்கோவிலில் வசிப்பதாகவும், கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் வீட்டில் தனியாக இருக்கிறேன் எனக்கூறி தனசேகரனை அவர் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
 
தனசேகரனும் ஆசையோடு நாகர்கோவில் சென்றுள்ளார். ஆனால், தன்னால் வர முடியவில்லை என்றும், தன்னுடைய தம்பியை அனுப்பி வைப்பதாகவும், அவருடன் வீட்டிற்கு வரும்படி அப்பெண் கூறியுள்ளார். எனவே, அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து தனசேகரன் சென்றுள்ளார் .
 
சிறிது நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தனசேகரிடமிருந்து செல்போன், ஏ.டி.எம் கார்டு மற்றும் அதன் ரகசிய எண் ஆகியவற்றை மிரட்டி வாங்கிக் கொண்டு அங்கு அவரை தனியே விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன் பின் அவரின் கணக்கிலிருந்து ரூ.83 ஆயிரத்தை ஏ.டி.எம். மையத்திலும் எடுத்துக் கொண்டார்.
 
தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த தனசேகரன் இதுபற்றி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முகநூல் மூலம் தனசேகரிடம் பழகியது உண்மையிலேயே பெண்தானா? அவரை மிரட்டி ஏ.டி.எம் கார்டை வாங்கி சென்ற வாலிபர் யார்? என்பது மர்மமாக இருக்கிறது. 
 
தனசேகரிடம் அந்த பெண் பேசிய செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.