1951 ஆம் ஆண்டு முதல்தேர்தலில் இருந்து வாக்களிக்கும் முதியவர்

imaschal
Last Modified திங்கள், 18 மார்ச் 2019 (11:28 IST)
இமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னாவூர் மாவட்டம்  கல்பா நகரில் வசிப்பவர் ஷியாம் சரண் நேகி 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிறந்தவர் ஆவார். 
அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவருக்கு 101 வயது முடிந்துள்ளது.
 
ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஷியாம் சரண் நேகி முதம் முதலாக வாக்களித்தார். அந்த தேர்தலில் வாக்களிக்கும் போது அவரது வயது 33 ஆகும்.
 
அப்போது துவங்கி இந்த 16 வது மக்களவை தேர்தல் வரை அவர் வாக்களிக்காமல் இருந்ததே இல்லை. ஷியாம் சரண் கடந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப் போட்டார். இனி அடுத்து வர இருக்கிற 17 வது மக்களவைத் தேர்தலிலும் (மே - 19) வாக்களிக்க உள்ளார்.
imaschal
ஷியாம் சரண் நாம் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் என்ற பாடத்தை அடுத்த தலைமுறைக்கு தன் செயல்கள் மூலம் எடுத்துரைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :