வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)

தமிழகம், புதுச்சேரியில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் கோடை வெயிலை விட அனல் பறக்கும் பிரசாரத்துக்கு தயாராகிவிட்டன.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் 91 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி  ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 25 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்கி 26 ஆம் தேதிநடைபெறுகிறது.  மேலும் திருபரங்குன்றம், அரவக்குறிச்சு, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 டொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம்தேதி அன்று நடைபெறவுள்ளது.