நாய் கழுத்தில் 'சௌகிதார் ' டேக்! வாட்ச்மேன் படக்குழு வெளியிட்ட வைரல் போஸ்டர்

VM| Last Modified திங்கள், 18 மார்ச் 2019 (11:03 IST)
நானும் காவலாளி தான் என நாய் கழுத்தில் டேகை போட்டு  சௌகிதார் போஸ்டரை வாட்ச்மேன் படக்குழு வெளியிட்டுள்ளது.

 
இது என்ன மாயம் படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சாய்ஷா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , முனீஸ்காந்த், ராஜ் அருண், சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாட்ச்மேன்.  டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண் மொழி மாணிக்கம்  இப்படத்தை தயாரித்துள்ளார்.   ஜி.வி. பிரகாஷ் வாட்ச்மேன் படத்துக்கு நடித்ததோடு மட்டுமின்றி இசையும் அமைத்துள்ளார். இந்த வரும் ஏப்ரல் 12ம்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நான் மக்களின் காவலன் என மோடி டுவிட்டர் பக்கத்தில் தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். இதனால் மோடி பெயருக்கு முன் சௌகிதார் வார்த்தை சேர்ந்துள்ளது  இதேபோல் மோடியை பின்பற்றி பாஜகவினர் அனைவரும் சௌகிதார் வார்த்தையை சேர்த்துள்னர். இந்த  விவகாரம் பேசும் பொருளாக சமூக வலைத்தளங்களில் மாறிவிட்டது.இதையடுத்து வாட்ச்மேன் படக்குழுவினர் நாய் கழுத்தில் நானும் கூட சௌகிதார் தான் என டேகை போட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .இதில் மேலும் படிக்கவும் :