1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. General Secreatary Muruganandham quits from MNM

மக்கள் நீதி மய்யத்தில் மேலும் ஒரு விக்கெட்: இன்று விலகியது யார் தெரியுமா?

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யத்தில் மேலும் ஒரு விக்கெட்: இன்று விலகியது யார் தெரியுமா?
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது என்பதும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பிரமுகர்கள் பலர் விலகத் தொடங்கினார். டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா, சந்தோஷ் பாபு உள்பட ஒருசில விலகிய நிலையில் இன்று மேலும் ஒருவர் விலகியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முருகானந்தம் இன்று செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சர்வாதிகாரம் அதிகரித்து விட்டதாகவும் 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதே தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அரபிக் கடல் முடிஞ்சது.. அடுத்து வங்க கடல்; புதிய காற்றழுத்த தாழ்வு நிலை? – வானிலை ஆய்வு மையம் தகவல்!