1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gayathri Raguram joins in admk

அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்: ஸ்டாலின், உதயநிதியை விமர்சனம் செய்வாரா?

அதிமுக
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் பாஜக தலைவர்கள் மீதும் குறிப்பாக அண்ணாமலை மீதும் கடும் விமர்சனம் வைத்த நிலையில் தற்போது அவர் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். 
 
இன்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் , தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். மேலும் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அதிமுக  அனுதாபிகள் என்றும் தனது தந்தை அதிமுகவில் தான் இருந்தார் என்றும் எனவே மீண்டும் அதிமுகவுக்கு தான் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதுவரை சமூக வலைத்தளங்களில் அண்ணாமலையை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருந்த காயத்ரி தற்போது அதிமுகவில் சேர்ந்து விட்டதால் ஸ்டாலின் மற்றும் உதயநிதியையும் விமர்சிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இனைந்த காயத்ரி ரகுராம்!