ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (14:23 IST)

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இனைந்த காயத்ரி ரகுராம்!

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர் அவர் அண்ணாமலையை விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில்  பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராமை தற்காலிக நீக்கம் செய்திருந்தார்.

அதன் பின்னர் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகினார்.  இதுபற்றி அவர் “பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம் . அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

அதன் பிறகு திமுகவுக்கு ஆதரவாக டிவிட்டரில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்து வந்தார். அதனால் அவர் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் இப்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.