வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:32 IST)

எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை.. என்னைவிட திறமையானவர்கள் உள்ளனர்: அண்ணாமலை

annamalai
எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்றும் என்னை விட திறமையானவர்கள் முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர்கள் பாஜகவில் உள்ளனர் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
பதவி ஆசை பிடித்தவர்கள் ஒரு  சில முக்கிய விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் ஒரே ஒருவர்தான் இருக்கின்றாரா?  இதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் 
 
என்னதான் ஒருவரை தயார் செய்து விளம்பரப்படுத்தி முதலமைச்சர் பதவிக்காக செயற்கையாக தேர்ந்தெடுத்தாலும் இயற்கை அதனை ஏற்றுக் கொள்ளாது. பாஜகவை பொருத்தவரை எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை. பாஜகவில் மக்களோடு மக்களாக நின்ற ஒருவராகத் தான் நான் இருக்க விரும்புகிறேன். 
 
முதலமைச்சர் பதவிக்கு என்னை விட திறமையானவர்கள் பலர் பாஜகவில் உள்ளனர். ஒரே தலைவரை சுற்றி சுற்றி ஒரு கட்சி இருக்கக் கூடாது.  பல தலைவர்கள் ஒரு கட்சியில் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva