வணிக சிலிண்டர் விலை உயர்வு!.. ஹோட்டல் பில் தாறுமாறா ஏறப்போகுது!..
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாத காலமாகவே போர் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் திருப்பி தாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன் அபுதாபி, துபாய் போன்ற வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விரைவில் முடிவுக்கு வரும்.. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்கா தொடர்ந்து சொன்னாலும் போர் நின்றபாடில்லை.
இந்த போர் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் வளைகுடா நாடுகலில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கிவருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் கொண்டுவரப்படும் கப்பல்கள் ஈரான் கடல்வழியான ஜலசந்தி வழியாகவே வருகிறது. ஆனால், போர் காரணமாக அந்த பகுதியை ஈரான் அரசு மூடிவிட்டது. எனவே உலகெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.. அதன் காரணமாக எரிவாயு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சமையல் கேஸ் சிலிண்டர் தயாரிப்பு தடைப்பட்டிருக்கிறது..
இந்நிலையில்தான், 19 கிலோ எடை உள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்திருக்கிறது. 2043.50-லிருந்து 2246.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது ஹோட்டல் மற்றும் தேனீர் கடை வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேஸ் விலையை காரணம் காட்டி ஏற்கனவே இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது சிலிண்டர் விலை மேலும் 203 உயர்ந்திருப்பதால் உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.