1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (08:07 IST)

வீடுகளுக்கு ரூ.100 வரை குப்பை கட்டணம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பால் பரபரப்பு!

வீடுகளுக்கு ரூ.100 வரை குப்பை கட்டணம்:
சென்னையில் சொத்து வரியுடன் குப்பை கட்டண வரியையும் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் சொத்துவரி ஏற்கனவே அதிகமாக இருப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் கூறிவரும் நிலையில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடமிருந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிரடியாக சொத்துவரி மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டினரும் குப்பை வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் உள்ள வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை குப்பி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலகங்களுக்கு ரூபாய் 300 முதல் ரூபாய் 3000 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் திருமண மண்டபங்களுக்கு ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும், உணவு கூடங்களுக்கு ரூபாய் 300 முதல் 5000 வரை குப்பை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குப்பை கட்டணத்தை ஜனவரி 1-ஆம் தேதி முதல் சொத்து வரியுடன் செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்று கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி திடீரென குப்பை வரி நிர்ணயம் செய்து உள்ளதால் சென்னையில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது