1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:40 IST)

கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - விற்பனைக்கு வைத்து இருந்த 4 நபர்கள் கைது

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,  முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 
 
அதன் அடிப்படையில்  பெரியநாயக்கன் பாளையம் பகுதியில்  கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  தனிப்படை  காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் பாளையம்  Housing Unit பூங்கா  பகுதிக்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்த கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த  மெய்யரசன், அதே பகுதியை சேர்ந்த புவனேஷ், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத், மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த லலித்குமார் ஆகிய 4 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1.050 கிலோ  கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30,000/- மதிப்புள்ள 3.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 
 
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த காவல் துறையினர்  
 
அப்படி தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று  தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.