1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (11:53 IST)

சைலண்ட் மோட் டூ ஆக்டிவ் மோட் ! – அதிமுக சைடு ஒதுங்கிய ஜிகே வாசன் …

தமிழக அரசியல் சூழல் தினமும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க தமிழ் மாநிலக் காங்கிரஸ் எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் மௌனமாக இருந்து வருகிறது.

தமிழகக் காங்கிரஸில் இருந்து பிரிந்த மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்றக் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த கட்சியாக மாறிக்கொண்டிருந்த த.மா.க. மூப்பனாரின் இறப்பிற்குப் பின் மெல்ல தேய ஆரம்பித்தது. அதன் பின் அவரது மகன் ஜிகே வாசன் அக்கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். இடையில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.க-ஐ ஆரம்பித்தார்.

ஆனால் மூப்பனார் அளவுக்கு ஜிகே வாசனால் கட்சியை பெரிய அளவிற்கு எடுத்து செல்ல முடியவில்லை. அதனால் த.மா.க. கிட்டத்தட்ட லெட்டர்பெடு கட்சியாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வர இருப்பதால் இப்போது சைலண்ட் மோடில் இருந்து ஆக்டிவ் மோடுக்கு வந்திருக்கிறது த.மா.க.

இதனையடுத்து இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வோடுக் கூட்டணி அமைத்து ஒரு சீட் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அதிமுக அதற்கு ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அந்த ஒரு சீட்டில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.