வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (19:56 IST)

கூட்டணி குறித்து வாய்திறக்காத பிரதமர்! பாஜக திட்டம் என்ன?

பிரதமர் மோடி இன்று திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது திமுக-காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தாரே தவிர, அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் பாஜக கூட்டணி குறித்து ரகசிய திட்டம் வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
 
பாஜகவை அதிமுக கூட்டணியில் இணைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர்களுக்கு எந்தவித மறுப்பும் இல்லை. ஆனால் தம்பிதுரை உள்ளிட்ட ஒருசில தலைவர்கள் பாஜகவை அதிமுக கூட்டணியில் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவை கூட்டணியில் சேர்த்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதே அவர்களது வாதம், எனவே பாஜக இல்லாத கூட்டணியை அமைக்க அதிமுக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அதிமுகவை தனிமைப்படுத்திவிட்டு பாஜக மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், உள்பட ஒருசில கட்சிகளை இணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டால் திமுகவுக்குத்தான் சாதகமாக முடியும் என்பதும் திமுக வெற்றி பெற்றாலும் அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என்பதும் அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.