வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:28 IST)

ராகு காலம்... தாமதமாகும் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு...

இன்று மாலை 4.30 வரை ராகு காலம் என்பதால் அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு அறிவிப்பில் தாமதம் என தகவல்.
 
மேலும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் 4.30 மணிக்கு மேல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தொடரபாக பிரபல தமிழ் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.
 
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. 
 
பாஜகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு மேல் ராகு காலம் கடந்த பின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
முன்னதாக அதிமுக பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இன்று நிறைவு பெற்றது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.