தொடர்புடைய செய்திகள்
- உலக அளவில் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குவதால் பரபரப்பு
- சிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு
- கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 ஆந்திர முதல்வர்
- உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாமல் போகலாம் ! WHO எச்சரிக்கை
- சென்னையில் குறைந்தாலும் தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு!
நேற்று முழு ஊரடங்கு முடிந்த மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா
மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா
மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் மதுரை மற்றும் ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறந்திருக்கும் என்பதும், அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மதுரையில் 3,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், மதுரையில் இதுவரை 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
