புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (21:05 IST)

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 ஆந்திர முதல்வர்

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா தொற்றால்  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவிவரும் இந்தத் தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த தொற்றைத் தடுக்க அரசு வரும் ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  ஆந்திர மாநில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய  ரூ. 15, 000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் 31,103 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16, 464 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 365 பேர் உயிரிழந்துள்ளனர்.