வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (06:36 IST)

உலக அளவில் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குவதால் பரபரப்பு

உலக கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குவதால் உலக நாடுகளிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் தகவலின்படி உலக அளவில் இதுவரை 5,80,248 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,39,676 ஆக அதிகரிப்பு எனவும் தகவல்
 
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க புதிதாக 215,389 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கடந்த 1 மாதமாக சராசரியாக தினமும் உலகம் முழுக்க 2 லட்சம் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்நிலையில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3,544,583 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 65100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 139135 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,931,204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று நேற்று ஒரே நாளில் 43,245 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் இதுவரை 74,262 பேர் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 29,842 கொரோனா பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 571,460 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 23,727 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது