வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (22:34 IST)

சிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ராஜா சிங்கை தாக்கியதாக எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களை விசாரிக்க சிபிஐ விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடியினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் ஐந்து காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள 5 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது.

இதுகுறித்து முடிவடுத்த நீதிமன்றம் சிபிஐ கோரிய 5 நாட்களை வழங்காமல் மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிஅலியில் இந்த மூன்று நாட்களில் சிபிஐ கைதிகளை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று நடந்த சம்பவங்களை செய்து காட்ட சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும்,  சிறையில் வைத்து  இருவரின் காயங்களுக்கும் மருந்து போடப்பட்டதாகவும் கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தன்னையும் தாக்கியதாக கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் குற்றச்சாட்டை அடுத்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ராஜா சிங்கை தாக்கியதாக எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அதில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் தற்போது காவலர் முத்துராஜ் உடன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.