வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் மொத்தம் 143 கலைக் கல்லூரியில் உள்ள நிலையில் இந்த கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை  www.tngasa.org, www.tngasa.in  ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து மாணவர்கள் தாங்கள் விரும்பும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது