செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (20:56 IST)

ஜுலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஜூலை 26 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லியில் அளித்த பேட்டியின்போது கூறினார்
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இதனை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்