1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (07:43 IST)

பல மாதங்களுக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பல மாதங்கள் கழித்து பள்ளிகள் இன்று திறப்பு மாணவ மாணவிகள் உற்சாகமாகி வருகின்றனர்
 
தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது
 
தமிழகத்தில் மட்டுமின்றி டெல்லி உள்பட 5 மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வெகு உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் 
 
மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கி உள்ள நிலையில் விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது