வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:31 IST)

நாளை பள்ளிகள் திறப்பு..வைரலாகும் மீம்ஸ்

தமிழகத்தில் ஒன்றரை வருடங்கள் கழித்து நாளை( செப்டம்பர்-1 ) ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்த மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இன்று காலையில்  தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , நாளை பள்ளிகள் திறப்பது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனப் பேட்டியளித்துள்ளார்.

அதில், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்; ஒவ்வொரு வகுப்பிலும் கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். ஒருநாளில் 5 வகுப்புகள் மட்டுமே செயல்படும், மாணவர்களுக்கு விளையாட்டு நேரம் இல்லை.

தினமும் காலையில் 9:30 மணி முதல் 6:30 மணிவரையிலும் வாரத்திற்லி 6 நாட்கள் மட்டுமே பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் எனவும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படுவதால், தொடக்கம் முதலே பாடம் நடத்தாமல், மாணவர்களை உளவியல் ரீதியாகத் தயார் செய்த பின்னரே பாடம் நடத்தப்படும் எனவும், இதுகுறித்து பெற்றோர், மாணவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.