திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:41 IST)

நாளை பள்ளிகளை திறக்க தடை!? – உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!

நாளை தெலுங்கானாவில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் பள்ளிகளை திறக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ளதால் பல மாநிலங்களில் பள்ளிகள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தெலுங்கானா அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பள்ளிகளை திறக்க கூடாது என கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது