வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:19 IST)

ஏடிஎம் கட்டணங்கள் இன்று முதல் உயர்வு: 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் எவ்வளவு?

ஏடிஎம் கட்டணங்களை ஆகஸ்ட் 1முதல் உயர்த்த வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததை அடுத்து இன்று முதல் ஏடிஎம் கட்டணங்கள் உயர்கின்றன
 
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் மூன்று முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் பணம் எடுக்க ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணமாக ரூபாய் 15 லிருந்து 17 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பணம் அல்லாத மற்ற பரிவர்த்தனைகளுக்கு ஐந்து ரூபாய் வரை கட்டணமாக இருந்த நிலையில் தற்போது அது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இந்த அறிவிப்பின்படி ஏடிஎம் கட்டணம் மற்றும் பணம் அல்லாத பரிவர்த்தனை கட்டணம் இன்று முதல் அனைத்து வங்கிகளிலும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம் கட்டணம் அதிகரித்துள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்