செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (13:01 IST)

எகிறிய மின் கட்டணம்... நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி!

ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

 
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு  2 ஆக பங்கிட்டு இலவச மின்சார அளவு கழிக்கப்படும் என்றும் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை கழித்துவிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். முன்னதாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடுவதற்கு பதிலாக மாதாமாதம் கணக்கிடப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. 
 
ஆனால் இது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இப்போது ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் அதிகமாக வந்திருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.