வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (15:33 IST)

பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி!

கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
இருந்தும் கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. கொரோனா, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 75% கட்டணம் செலுத்தலாம் எனவும் கடைசி தவணையை 2022ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.