புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 மே 2020 (17:44 IST)

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு'

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க அமைச்சரவை முடிவு செய்த நிலையில் அங்கு கடந்த வாரமே மது கடைகள் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால் புதுவை கவர்னர் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மது பிரியர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் நேற்று மாலை புதுச்சேரி கவர்னர் அவர்கள் மதுக்கடைகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து விரைவில் புதுவையில் மதுக்கடைகள் திறப்பது குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று புதுவை கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் அறிவித்துள்ளார். புதுவை முழுவதும் நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மது வாங்க வருபவர்களும் மது விற்பவர்களும் தனிமனித இடைவெளி உள்பட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மதுபானங்கள் வரிகள் உயர்த்தப்படுவதாகவும் இந்த வரி உயர்வு அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதுவையில் மதுபானங்களில் விலை உயரும் என தெரிகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்க புதுச்சேரிக்கு யாரும் வரக்கூடாது என்றும் கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.