1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (09:24 IST)

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை – அமைச்சர் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.


இலவசங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

மக்கள் நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு வேறுபாடு உள்ளது என்றும் அரசு வழங்கும் இலவசம் சில நேரத்தில் ஏழைகளுக்கு முக்கிய அம்சங்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் காந்தி, பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், 2022-23 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுடிதோறும் விலையில்லா சீருடை திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன் வேட்டி, சேலை திட்டப்பணிகள் தொடரும் என கூறியுள்ளார்.