வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (16:02 IST)

பிரபுதேவா நடிப்பில் வெளியான பொய்க்கால் குதிரை… பாக்ஸ் ஆஃபீஸ் டிஸாஸ்டர்!

பொய்க்கால் குதிரை திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. ஆனால் வந்த சுவடே இல்லாமல் மோசமான வசூலை பெற்றுள்ளது.

கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி இருந்தார். இந்நிலையில் கடந்த வார்ம் வெளியான படங்களிலேயே மோசமான வசூல் செய்துள்ள படமாக பொய்க்கால் குதிரை திரைப்படம் மாறியுள்ளது.

கடந்த வாரத்தில் இப்போது வரை இந்த படம் வசூலித்த தொகை மிகவும் கம்மி என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து பிரபுதேவாவின் படங்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.