1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police sent summon to dmk councilor

முதல்வரை வதூறாக பேசிய திமுக கவுன்சிலருக்கு சம்மன்!.. காவல்துறை அதிரடி..

vijay
திமுக மேடை என்றாலே அனல் பறக்கும் தமிழ் என்பதெல்லாம் போய் இப்போது அவதூறு, ஆபாசம் என மாறிவிட்டது. குறிப்பாக திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மேடைகளில், விழாக்களில் எதிர்கட்சியினரை மிகவும் மோசமாகவும், அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுகிறார்கள். ஏற்கனவே சில திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒருபக்கம், உதயநிதி, ஆர்.ராசா போன்றவர்களும் அப்படித்தான் பேசி வருகிறார்கள். அதைப்பற்றியெல்லாம் திமுக தலைமை கவலைப்பட்டதாக தெரியவில்லை. திமுக தலைவர் முக ஸ்டாலினே தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது தவெக வேட்பாளளரை உருவ கேலி செய்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்த மும்பெரும் விழாவில் பேசிய திமுக கவுன்சிலர் மற்றும் திமுக சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் முதல்வர் விஜயி மிகவும் மரியாதைக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இது தவெகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திமுக கவுன்சிலர் தீனதயாளனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடல், அரபிக்கடல்.. 2 புயல்கள்.. தமிழகம், கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை...