வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (18:21 IST)

போதையில் போலீஸை போட்டு அடித்த நான்கு பேர் – வீடியோ வெளியானது

சென்னையில் நள்ளிரவில் மது அருந்திவிட்டு போலீஸை தாக்கிய நான்கு நபர்களை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கடந்த 13ம் தேதி சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கார்த்திகேயன் என்ற காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாலை ஓரமாக நான்கு இளைஞர்கள் திருநங்கை ஒருவருடன் பேசி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர்களிடம் சென்று என்னவென்று விசாரித்து உடனடியாக கிளம்பி போகும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த இளைஞர்கள் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று சொல்லி மிரட்டியுள்ளனர். அவர்களை அங்கிருந்து விரட்ட காவலர் லத்தியை கொண்டு அடித்துள்ளார். உடனடியாக லத்தியை பிடுங்கி கொண்ட அவர்கள் காவலர் கார்த்திகேயனை திரும்ப தாக்கியுள்ளார்கள். உடனடியாக அவர் வாக்கி டாக்கி மூலம் மற்ற காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அந்த நால்வரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் வழக்கறிஞர்கள் இல்லையென்பதும் மது அருந்திவிட்டு வண்டியோட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.

காவலரை அவர்கள் அடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.