1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former mla kovai selvaraj smashed kamal haasan

கமலுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ விமர்சனம்

கமல்ஹாசன்
கமலுக்கு சொல்ல புத்தியும் இல்லை, சொந்த புத்தியும் இல்லை என கோவை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ செல்வராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் அரசியல் தொடர்பான கருத்துகளை டுவிட்டரில் பதிவிட தொடங்கினார். அதற்கு பல அரசியல் கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து தான் அரசியல் களத்தில் குதிக்க போவதாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என எதிர்பார்ப்பு உள்ளது.
 
எண்ணூர் துறைமுகம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கழிவுகளால் வட சென்னைக்கு ஆபத்து என்றும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்திருந்தார். இன்று காலை கமல் துறைமுகப் பகுதியை பார்வையிட்டார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் கோவை முன்னாள் எம்.எல்.ஏ.செல்வராஜ் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
மக்கள் அடிப்படை அறிவற்றவர்கள் என கமல் நினைக்கிறார். கமல் தன்பாட்டுக்கு செயல்படுகிறார். கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை என்று கூறியுள்ளார்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
30 பெண்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய காம கொடூரன்....