அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவிற்கு ஆதரவு : மெகா கூட்டணி அதிர்ச்சி

raja kannapam
Last Updated: திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)
தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளான திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகலுகே கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிரமான பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ராஜ கண்ணப்பன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக விற்கு ஆதரவு அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.
 
சில வருடங்களுக்கும்,ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக  விலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். 8 வருடம் கட்சி நடத்திய பிறகு அதிமுகவில் இணைந்தார். 
 
இந்நிலையில் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் ஆகிய இரண்டில் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட எண்ணினார். ஆனால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படவே தற்போது திமுகவிற்கு ஆதரவு என்ற முடிவு எடுத்துள்ளார்.
 
இன்று மாலை தேனாம்பேட்டையில் உள்ள திமுக கட்சி அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் ராஜகண்ணப்பன் இணைவார் என்று தெரிகிறது.
 
ஏற்கனெவே அதிமுகவில் பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர், அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராகவும் வலம் வந்தவர்தான் ராஜகண்ணப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :