திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (15:25 IST)

தெறி பேபியா இது! இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.!

அட்லீ இயக்கத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த தெறி படத்தில் கைக்குழந்தையாக நடித்த அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அட்லி - விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், எமி ஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் என்று மிகப்பெரிய பட்டாளமே நடிக்க பிரபல நடிகையான மீனாவின் மகள்  நைனிகா விஜய்யின் செல்ல மகனாக அற்புதமாக  நடித்திருந்தார். தெறி படத்தில் நடித்ததன் மூலம் பேபி நைனிகா மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். 
 
இப்படத்தில் விஜய் மகள் சமந்தாவின் பிளாஷ்பேக் காட்சியில் பெண் குழந்தை பிறப்பது போல சில காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். அதில் கைக் குழந்தையாக நடித்த அந்த குழந்தை யார் என்று தெரியாத நிலையில், தற்போது அக்குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தற்போது அவருக்கு மூன்றரை வயது ஆகின்றதாம்.