புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)

தஞ்சையில் தமாகா வேட்பாளர் இவரா!!! அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமாகா தஞ்சையில் போட்டியிடுள்ள நிலையில் அதன் வேட்பாளர் பெயர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

 
எல்லா கட்சிகளும் தனது கூட்டணியை உறுதி செய்த நிலையில் கடைசியில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தது தமகா. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமாகாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஜி.கே.வாசனின் தமாகாவிற்கு தஞ்சாவூர் தொகுதியை அதிமுக நேற்று ஒதுக்கியிருந்தது.
 
இந்நிலையில் தமாகா சார்பில் தஞ்சையில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடப்போவதாக தமகா தலைமை அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.