வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (14:51 IST)

தோல்விக்கு நான் காரணமா.! "அடார் லவ்" இயக்குனரை மிரட்டிய பிரியா வாரியர்.!

ஒரே ஒரு பாடலில்  உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை  பிரியா வாரியர் ஒரு அடார் லவ்  என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். 
 
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய ‘ஒரு அடார் லவ்’. படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியார் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
சமீபத்தில்  பிரியா வாரியரை ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்த ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது,  இயக்குனர் ஓமர் லூலுவின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள பிரியா வாரியர்,   நான் உண்மையை சொன்னால் அது ஒரு சிலருக்கு மிகப்பெரிய பிரச்சினை அது உருவாக்கும். நான் அவர்களைப் போன்று இருக்க விரும்பவில்லை. நான் அமைதியாக இருப்பேன். ஒருநாள் கர்ம வினை அவர்களை சும்மா விடாது. அதற்கான நேரமும் மிக தொலைவில் இல்லை. என்று கூறியுள்ளார். தன்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குனரையே பிரியா வாரியர் இப்படி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.