சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிப்பு.. இன்றுக்குள் பிடிபட வாய்ப்பு என வனத்துறை தகவல்..!
கடந்த சில நாட்கள் ஆக மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று சுற்றி கொண்டிருந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது என்பதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது என்பதையும் தெரிந்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் சுற்றிக் கொண்டிருந்த சிறுத்தை இடம் மாறி தற்போது அரியலூர் சென்று விட்டதாக சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரியவந்ததை அடுத்து அரியலூர் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் அரியலூர் சென்று அங்குள்ள காடுகள் புதர்களில் சிசிடிவி கேமராக்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். கடந்த சில நாட்களாக வனத்துறை அதிகாரிகளுக்கு போக்கு காட்டி சிறுத்தை பிடிபடாமல் இருந்த நிலையில் தற்போது அரியலூர் மாவட்டம் நின்னியூர் என்ற பகுதியில் சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை என தெரிவித்துள்ளனர்
இதனை அடுத்து சிறுத்தையை அனேகமாக இன்றுக்குள் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்கும் குழுவினர் செந்துரையிலிருந்து நின்னியூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran